சென்னையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளங்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

“நமது ஐடி விங் அணியினர் எப்போதும் தற்காப்பு ஆட்டத்திலேயே (Defence) இருக்கக் கூடாது; அவ்வப்போது தாக்குதல் ஆட்டத்திற்கும் (Attack Mode) மாறிக் கொள்ள வேண்டும்” எனத் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். மேலும், தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை வலிமைப்படுத்தியதில் ஐடி விங் உறுப்பினர்களின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், அரசின் சாதனைகள் மக்களைச் சென்றடைவதில் இந்த அணியின் பங்களிப்பைப் பாராட்டி கௌரவித்தார்.