ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ (Zomato) தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அதேபோல், போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் (Swiggy) தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 12.50-லிருந்து ரூ. 14.90-ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் இனி ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும்.

ஏற்கனவே ஹோட்டல் விலையை விட ஆன்லைன் விலை அதிகமாக இருக்கும் நிலையில், இந்த கூடுதல் கட்டண உயர்வு நடுத்தர மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.