தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் (Smart Ration Cards) கோரி விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி, மிக விரைவில் ரேஷன் அட்டைகளை அச்சிட்டு விநியோகம் செய்யத் தேவையான அனைத்து அதிரடி நடவடிக்கைகளையும் உணவுத்துறை தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் புதிய ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணிகளை ஒட்டுமொத்தமாக முழுமையாக முடித்து, பயனாளிகளின் கைகளில் கார்டுகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உயர் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நிர்வாக ரீதியிலான பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவையான ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க உணவுத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
