டெல்லி மெட்ரோ இரயிலில் இளைஞர் மற்றும் இளம்பெண் ஒருவருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. வைரலாகியுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் ஆக்ரோஷமாக இளைஞரை நோக்கி, “ஆண்கள் வார்த்தை மாறுகிறார்கள், இனிமேல் என் கண் முன்னால் வந்து நிற்காதே!” என்று ஹிந்தியில் கத்தி சண்டையிடுவதைக் காண முடிகிறது.
மேலும் இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் அந்தப் பெண் இளைஞரைத் தாக்க முயன்றதும், சுற்றியிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடகம் மெட்ரோவின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Kalesh b/w Girl and Guy inside Delhi metro over push and shove pic.twitter.com/0eP7J72az3
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 31, 2026
“>
இந்நிலையில் மெட்ரோ போன்ற பொது இடங்களில் இது போன்ற தனிப்பட்ட சண்டைகள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “மெட்ரோவில் பயணம் செய்யவா அல்லது இந்த நாடகங்களைப் பார்க்கவா?” என்று கிண்டலாகக் கேட்டு வரும் சமூக வலைதள வாசிகள், பொது இடங்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
