தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அந்த மாநில முதல்வர்கள் மழையை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரான பிரபாஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானாமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பிரபல நடிகர்கள் மகேஷ் பாபு, பாலையா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ,ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரும் தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.