இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், பள்ளி சிறுமி ஒருவர் தமிழ் எண்களை எளிமையாக நினைவில் வைப்பது பற்றி சுவாரஸ்யமாக விளக்குகிறார். அவர் சொல்லும் வாக்கியம்: “கடலை உருண்டையை நுணுக்கி சமைத்து ருசித்து சாப்பிட என்னை அம்மா கூப்பிட்டால்”.

இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தத்தின் முதல் எழுத்தை கோடிட்டால், 1 முதல் 9 வரையிலான தமிழ் எண்கள் தெரிகின்றன. க – 1, உ – 2, ங – 3, ச – 4, ரு – 5, சா – 6, எ – 7, அ – 8, கூ – 9. இந்த எளிய முறையை சிறுமி தனது படிப்பு நண்பர்களுக்கு கற்பிக்கும் வகையில் அருமையாக விளக்கியுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. X (ட்விட்டர்) இல் ஆயிரக்கணக்கான லைக்ஸ், ரீபோஸ்ட்கள் கிடைத்துள்ளன. பலர் இந்த முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் கலாச்சாரத்தை எளிமையாக அறிந்து கொள்ள உதவும் இந்த வீடியோ, அனைவரையும் கவர்ந்துள்ளது.