இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி கொடுத்துள்ள விநோதமான அட்வைஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நாம் பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆன்மீக ரீதியாக விரதம் இருப்பது போல, இனிவரும் காலங்களில் மாதத்திற்கு ஒருமுறையாவது மொபைல் போன்களைப் பயன்படுத்தாமல் “டிஜிட்டல் விரதம்” இருக்க வேண்டும் என்று ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி, இந்த டிஜிட்டல் விரதத்தை மாணவர்கள் ஒருமுறையாவது தங்களது வாழ்க்கையில் கடைபிடித்துப் பார்க்க வேண்டும் என்றும், அப்படி மொபைல் போனைத் தொடாமல் இருக்கும் அந்த ஒரு நாளில் உங்களது முகமும், மனதும் எவ்வளவு அழகாகவும், அமைதியாகவும் மாறுகிறது என்பதை நீங்களே உணர்வீர்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரமும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறை மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சமுத்திரக்கனி பேசியுள்ள இந்த “டிஜிட்டல் விரதம்” குறித்த அறிவுரை, தற்போது இணையவாசிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
