திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது.

சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கி விட்டு சிலைகளை விற்கலாம். வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.