டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் அத்து மீறும் சம்பவங்கள், பயணிகளுக்கு இடையே தகராறு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ், ஆபாசமாக உடையணிந்து வந்தது போன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது டெல்லி மெட்ரோ ரயில்வே நிலையத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது டிக்கெட் வாங்கும் கவுண்டரில் பயணிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது இரு பயணிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அதோடு இருவருக்கும் இடையே திடீரென அடிதடி ஆனது. அதனை அருகில் இருந்த மற்றொரு பயணி தடுத்தார். ஆனால் அவரை ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்து விட்டார். இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.