சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த ‘க்வெடாமன்’ என்ற வெளிநாட்டு இளைஞர், பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகர் அரிஜித் சிங்கின் “தும் ஹி ஹோ” பாடலை மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இது அரிஜித் சிங்கின் குரலில் இருக்கும் ஆன்மா தனது இதயத்தைத் தொட்டுவிட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறும் அந்த இளைஞர், இந்தி மொழி தெரியாவிட்டாலும் அந்தப் பாடலின் மெல்லிசையையும் உணர்ச்சியையும் உள்வாங்கி பாடியுள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவின் சிறப்பம்சமாக, உலகளாவிய நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா ஜோனஸ் இந்த வீடியோவை விரும்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மொழிகளைக் கடந்து இசை இதயங்களை இணைக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த வீடியோவில், அந்த வெளிநாட்டவர் “ஹம் தேரே பின் அப் ரஹ் நஹி சக்தே…” என்ற வரிகளைப் பாடும் விதம் இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அவர் அரிஜித் சிங்கின் இசை உலக அளவில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பெருமிதத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
