இந்திய அணியின்  விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார். 2008ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து, இந்தியாவுக்கு பல வெற்றிகளை வழங்கியவர் எனும் வகையில் அவரது இந்த முடிவு ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபான்களுக்கே பிடிக்கும் என்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி வெளியிட்ட கருத்து புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. அவர் கூறுகையில், “விராட் கோலி 50 வயது வரை கிரிக்கெட் விளையாட வேண்டும்.

அவரது பேட்டிங்கை தாலிபான்களுக்கே ரசித்து பார்க்கும் அளவுக்கு அவர் திறமையான வீரர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விரைவில் ஓய்வு பெற்றது வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார். ஹக்கானியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

“>

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் லண்டனின் அழகிய தெருக்களில் நிதானமாக நடந்து சென்று, ஒன்றாக சிறிது ஓய்வு நேரத்தை அனுபவித்து வருகின்றனர்.

உலகளாவிய புகழ் பெற்றிருந்தாலும், தங்கள் அடிப்படை இயல்புக்கு பெயர் பெற்ற இந்த ஜோடி, தங்கள் நடைப்பயணத்தின் போது ஒரு சில உள்ளூர்வாசிகளுடன் அரட்டையடிக்க நின்று, அவர்களின் அரவணைப்பு மற்றும் பணிவுக்காக பாராட்டைப் பெற்றது.