ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், பின்னர் விவாதத்தையும் உருவாக்கியது.
இந்திய அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது.
இந்த வெற்றியின் போது இடம்பெற்ற வியக்கத்தக்க சம்பவம் ஒன்றும், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
பாகிஸ்தானின் தோல்வி உறுதியான தருணங்களில், பாகிஸ்தான் அணியின் ஜெர்சி அணிந்திருந்த ஒருவர், திடீரென இந்திய அணியின் ஜெர்சியை மாற்றி அணிந்து, இந்திய ரசிகர்களுடன் நடனமாடத் தொடங்கிய வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. இந்த காட்சி, துபாய் சர்வதேச மைதானத்தில் இருந்த இலட்சக்கணக்கான ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஏற்ற அந்த ரசிகர், இந்திய வெற்றியை கொண்டாடிய விதம், சமூக ஊடகங்களில் பாராட்டையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
Akhir India ki hi Paidaish hai🤣
Baap ke paas akar he chupay ga ye porki🤣#indvspak2025 #INDvPAK #PAKvIND #PakVsInd #PakistanCricket pic.twitter.com/n0eMsmp5oK— Pathan Bhai (@PathanBhaiii) September 14, 2025
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதால், பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிரடி பந்துவீச்சை நிகழ்த்தினார். பின்னர் பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணிக்காக, அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். அவரும், ஷுப்மன் கில்லும் அவுட்டான பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆட்டத்தை கட்டுப்படுத்தி, 15.5 ஓவர்களில் இலக்கை எட்டினர்.
மேலும் இந்த போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் நேரடியாக டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர்.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத சூர்யகுமார் யாதவ், “நான் என் நாட்டை வழிநடத்துகிறேன்” என்ற அவரது நடைமுறையால் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
