பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ரயில்வே பிரிவு, இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
6 வெவ்வேறு சரக்கு ரயில்களை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ருத்ராட்சம்’ எனப்படும் சிறப்பு சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. சுமார் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயிலில் மொத்தம் 354 வேகன்கள் மற்றும் 7 சக்திவாய்ந்த என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் கனமான சரக்கு ரயிலாகப் பெயர் பெற்றுள்ளது.
#WATCH | Chandauli, Uttar Pradesh | For the first time in the entire Indian Railways, Pandit Deen Dayal Upadhyay Division ran 4.5 km long ‘Rudrastra’, a 354 wagon freight train made by joining 6 box rakes together, was run by 7 engines.
‘Rudrastra’ was successfully run from… pic.twitter.com/tk83MgfU7F
— ANI (@ANI) August 9, 2025
“>
ரயில்வே தகவலின்படி, ‘ருத்ராட்சம்’ கஞ்ச் குவாஜா நிலையத்திலிருந்து கர்வா சாலை நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில், சரக்கு போக்குவரத்துக்காகவே உருவாக்கப்பட்ட அதிவேக பாதையான பிரத்யேக சரக்கு வழித்தடம் (DFC) வழியாக இயக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகளவிலான சரக்குகளை குறைந்த நேரத்தில் இலக்கை அடையச் செய்யும் திறன் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் கூறுகையில், ‘ருத்ராட்சம்’ இயக்கம் தளவாடத் திறன்களை மேம்படுத்துவதோடு, இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து துறையை மேலும் நவீனப்படுத்தும். இதன் மூலம் சரக்கு சேவைகள் உலக தரத்தில் போட்டியிடும் அளவுக்கு முன்னேற்றம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
