இந்திய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரை, அடையாளம் தெரியாத மூன்று இந்திய இளைஞர்கள் மனிதாபிமானத்துடன் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணம் மேற்கொண்ட அந்தப் பெண், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி சாலையில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
மேலும் அப்போது அந்த வழியாகச் சென்ற மூன்று இளைஞர்கள், உடனடியாகத் தங்களின் பயணத்தை நிறுத்திவிட்டு அவருக்கு உதவ முன்வந்தனர். முதலுதவி அளித்தது மட்டுமின்றி, அவருக்குத் தேவையான மனதிடத்தையும் தந்து பாதுகாப்பாக மீட்ட அந்த இளைஞர்களின் செயலை அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
இதனால் “அவர்கள் எனக்காக நின்றார்கள்” என்று அந்தப் பெண் தனது வீடியோவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மொழி தெரியாத போதிலும், ஒரு மனித நேயத்துடன் அந்த இளைஞர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் தன்னை வியக்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பையும், இக்கட்டான சூழலில் உதவும் குணத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ்ப் பண்பாட்டிற்கு இணங்க, அந்நிய நாட்டுப் பயணிக்கு உதவிய அந்த இந்திய இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
