மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 இடங்களுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 206 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் மம்தாவின் 15 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் முன்னாள் முதல்வர் மம்தாவை சொந்த தொகுதியிலேயே பாஜகவின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரி வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என தொடர்ந்து பிடிவாதம் பிடித்த நிலையில் ஆளுநர் ரவி அங்கு மம்தாவின் அரசை கலைத்து உத்தரவிட்ட நிலைமையில் புதிய அரசு ஆட்சி அமைக்கவும் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விரைவில் ஆளுநர் ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க கோர இருக்கிறார்.
