டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் வீரர்கள் சொதப்பிய நிலையில் சாம்சன் அதிரடியாக ஆடி நிதானமாக 50 பந்துகளில் 97 ரன்கள் வரை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடுவதால் ஓரங்கட்டப்பட்ட சாம்சன் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதனை சரியான முறையில் பயன்படுத்தி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் சாம்சனை பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், முக்கியமான போட்டியில் அவர் சிறப்பாகச் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Not many opportunities this #WorldCup, but when it mattered, Sanju stood tall and played the innings of his life 👏🏻 That’s the mindset of a champion! Stay ready, stay patient and never stop believing! Proud of you @IamSanjuSamson! The spirit of never giving up always wins!…
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2026
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், அணிக்குத் தேவையான மிக முக்கியமான கட்டத்தில், அவர் தனது வாழ்நாள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாம்சனின் இந்த ஆட்டம், ஒரு உண்மையான சாம்பியனின் மனநிலையை காட்டுவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் இருந்து, கடைசி வரை போராடும் குணம் எப்போதும் வெற்றியையே தரும் என்றும் ரசிகர்கள் சஞ்சு சாம்சனைப் பாராட்டியுள்ளனர்.
