“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார்.

தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த மெகா திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, விவசாயத்தின் முக்கிய கேந்திரமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக மட்டும் ரூ.77.50 கோடி நிதியும், அதே சமயம் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.57.33 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி மற்றும் சமநிலையான அறிவிப்பு, பாசன நீரை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.