தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது வீடியோ மூலமாக தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார். அதன்படி சுயநலமில்லாமல் தன்னுடைய சேவைகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்வேன் என்று லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில் நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் உங்களுடைய கருத்தை நீங்கள் கீழே கமெண்டில் கூறலாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதோடு நான் யாருடன் இணைய வேண்டும் என்பதையும் எனக்கு அரசியலுக்கு வர தகுதி உள்ளதா என்பதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருந்தேன். ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியவுடன், நான் மிகவும் வருத்தப்பட்டு விட்டேன் என்றார். மேலும் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் அவருடன் இணைய வேண்டும் அவர் ஆதரவாக நிற்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என்னுடைய தாயார் அரசியல் ஒரு சாக்கடை நீ அரசியலுக்கு போகாத கண்ணா என்று கூறி என்னை தடுத்துவிட்டார். பணம் கொடுத்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று என் தாய் கூறிய நிலையில் விஜய் ஜெயித்த பிறகு என்னுடைய தாயிடம் நீ சொன்னது தப்பாக போய்விட்டது விஜய் ஜெயித்துவிட்டார் என்றேன். உடனே அதற்கு என்னுடைய அம்மா அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு. நீயும் போ கண்ணா என்று கூறினார்கள் என்றார். மேலும் இதன் காரணமாக தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.