இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இருக்கிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில் அந்த அணி கோப்பையை வென்றது.
இதனைத் தொடர்ந்து அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணி இவரது தலைமையில் சிறப்பாக விளையாடினாலும் சில போட்டிகளில் சொதப்பி வருவதால் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கம்பீர் பதவிக்காலம் முடியும் வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார் என அறிவித்துள்ளார். மேலும் அதன்படி 2027 வரை கம்பீர்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
