மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா தனது அசாத்திய திறமையால் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சை அவர் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அணி ஒருகட்டத்தில் 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தபோது, தீப்தி சர்மாவின் சுழற்பந்து வீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
Patience. Belief. Performance. 💙#DeeptiSharma shares the mindset behind her match-winning spell. 🎙️
Watch her next on ICC Women’s #T20WorldCup 2026 👉 #INDvNED | WED, 17th June, 6 PM! pic.twitter.com/FxJ6mmb9BY
— Star Sports (@StarSportsIndia) June 14, 2026
“>
இதனால் இவருடைய இந்த அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்கு சுருண்டதுடன், இந்தியா 170 ரன்கள் இலக்கை எளிதாகப் பாதுகாத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற தீப்தி சர்மா செய்தியாளர்களிடம் பேசிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தனது இந்த வரலாற்று சாதனையின் முழு வெற்றியையும் அணியின் சக வீரர்களுக்கும், ஹனுமான்ஜியின் ஆசிர்வாதத்திற்கும் சமர்ப்பிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் ஆஞ்சநேயர் சிறந்தவர் என்று உத்வேகத்துடன் கூறிய வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்பொழுது மிகவும் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
