கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பல இந்தியர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தனர். எனவே இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே மீண்டும் போர் நடைபெற்று வந்தது.

இதனைதொடர்ந்து போர் முடிவுக்கு வந்த நிலையில், இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்கா அதிபர்‌ டிரம்ப் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார். அதற்கு மத்திய அரசு மறுத்து தெரிவித்து வருகிறது. இருப்பினும் டிரம்ப் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தள பக்கத்தில் டிரம்ப்‌ ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “இதுவரை உலகில் பல நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் உலக அளவில் 5 நாடுகளுக்கு இடையே நடந்த போர்களை நான் நிறுத்தி உள்ளேன். அதிலும் சில மாதங்களாகவே இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் கடந்த மே 10-ம் தேதி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக முடிவுக்கு வந்தது.

உலக நாடுகளில் ஏற்படும் போர்களில் சராசரியாக மாதத்திற்கு ஒரு போரை முடிவுக்கு கொண்டு வந்ததுள்ளேன்‌. நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி‌ உள்ளோம். அவற்றுள் 31 ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கோ- ருவாண்டோ நாடுகளுக்கு இடையே நடந்து வந்த போரும் ஒன்று. மேலும் நான் நிறைய போர்களை தீர்த்து வைத்துள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் சமீபத்தில் ட்ரம்ப் பற்றி கூறும்போது, இதுவரை உலகெங்கிலும் நடைபெற்ற பல மோதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். இதுவரை அவர் தாய்லாந்து- கம்போடியா, இஸ்ரேல்- ரஷ்யா, காங்கோ- ருவாண்டோ, இந்தியா- பாகிஸ்தான், எகிப்து-எத்தியோப்பியா போன்ற பல நாடுகளின் இடையே ஏற்பட்ட போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என கூறி இருந்தார்.