“இந்திய மண்ணின் விருந்தோம்பலும், கலாச்சாரமும் உலகிலேயே மிகச் சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்போது இணையதளங்களை உலுக்கி வருகிறது.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், இங்கிருந்து விடைபெற்றுத் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பும்போது ஒருவிதமான பிரிய முடியாத மனவேதனையை உணர்வது வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த பிரிட்டிஷ் பயணி பகிர்ந்துள்ள பதிவு இந்தியர்களின் நெஞ்சங்களைத் தொட்டுள்ளது.
‘இந்தியாவையும், இங்கு எனக்குக் கிடைத்த பாசக்கார நண்பர்களையும் பிரிந்து செல்வதுதான் இந்த உலகத்திலேயே எனக்கு மிகப்பெரிய வலி; ஒவ்வொரு முறை நான் இங்கிலாந்து திரும்பும்போதும் மற்ற எந்த நாடுகளையும் விட எனக்கு இந்தியாவே மிகவும் பிடித்தமான இடமாக மாறுகிறது’ என அவர் கண்கலங்கியபடி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
மேலும், ‘வாழ்க்கைக்காகப் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், ஒவ்வொரு முறை இங்கிருந்து கிளம்பும்போதும் என் மனம் வலிக்கிறது, மீண்டும் இந்தியாவிற்கே வர வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் இருக்கிறது’ என அவர் தன் ஆழமான அன்பைக் கொட்டியிருப்பது, இந்தியப் பண்பாட்டின் மீதான அந்நியர்களின் உச்சக்கட்ட மரியாதையை உலகரங்கில் மீண்டும் பறைசாற்றியுள்ளது.”
View this post on Instagram
“>
