தமிழகத்தின் ஜிடிபி (GDP) 11.5% ஆக உயர்ந்துள்ளதால், இந்தியாவே வியக்கும் வகையில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி 6.9% உயர முக்கிய காரணமாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார். “வெளிநாட்டிற்கு நாம் வேலைக்குச் செல்வதை விட, வெளிநாட்டினரே இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும்” என்ற முதல்வரின் தொலைநோக்கு பார்வையால், இதுவரை 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகி உள்ளன. இதில் 867 ஒப்பந்தங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்து சாதனை படைத்துள்ளன.
India’s GDP growth is largely driven by Tamil Nadu’s development.
✨ 3.4 Million Youth Employed
🏭 Global Industry Leaders Choosing TN
📈 Driving India’s Economic GrowthTamil Nadu’s growth is India’s economic strength.#EconomicGrowth #GDP #IndustrialGrowth #YouthEmployment… pic.twitter.com/GTYyEUKdzb
— Naveen N (@iamyournaveen) March 5, 2026
சமீபத்தில் சென்னையில் நடந்த ‘குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் 2024’ (GIM) நிகழ்வில் மட்டும் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, சுமார் 37 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12.5 கோடி முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை முதல்வர் மாற்றியுள்ளார். “அனைவருக்கும் வேலை” என்ற இலக்குடன் செயல்படும் இந்த ‘திராவிட மாடல்’ அரசு, உலக அரங்கில் தமிழகத்தைத் தனித்துவமாக மாற்றியுள்ளது என திமுக நிர்வாகி நவீன் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
