திமுக ஆட்சியில் தங்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்றும், அடிப்படை வசதிகளின்றி தவிக்கிறோம் என்றும் பெண்கள் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது, ஆனால் எங்கள் சம்பளம் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கிறது. கணவருக்கு ஒழுங்கான வேலை இல்லை, அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது” எனப் பெண்கள் தங்கள் வறுமையை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) March 7, 2026
மேலும், அரசு கட்டிக்கொடுக்கும் வீடுகளைப் பெற பெரிய தொகையை எங்களால் எப்படிக் கட்ட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர். “ஆளுங்கட்சியினருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குமே வீடுகள் வழங்கப்படுகின்றன; மாற்றங்கள் வரும் எனŕ மேடைக்கு மேடை பேசுபவர்கள், நிஜத்தில் எங்களை அலட்சியப்படுத்துகிறார்கள்” என்று காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். படிக்க வழியில்லாத குழந்தைகள், வேலையில்லாத கணவர்கள் என அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் இந்த மக்களின் குமுறல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
