தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வரும் மே மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அதிரடி முடிவின் மூலம், சுமார் 41,000 ஒப்பந்த ஊழியர்கள் 2026-27-ம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வைப் பெற உள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹169 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வு எவ்வளவு என்பது குறித்த விரிவான அரசாணை (GO) இன்னும் சில தினங்களில் முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு இனிப்பான செய்தியாகத் திகழ்வதோடு, மருத்துவத்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
