இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள் இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகளை மதமாற்றம் செய்ய ஆன்லைன் கேம்களை ஒரு தளமாக பயன்படுத்தும் கும்பல் உள்ளது.

அதனால் இந்தியா அத்தகைய விளையாட்டுகளை தடை செய்ய உள்ளது. அதாவது பந்தயம் கட்டுவதை உள்ளடக்கிய அல்லது பயனருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் அடிமையாகும் காரனையே உள்ளடக்கிய விளையாட்டுகள் தடை செய்யப்படும். இந்த கேம்கள் அனுமதிக்கப்படும் எவை அனுமதிக்க படாது என்பதை முடிவு செய்வதற்கான முழுமையான மற்றும் வலுவான கூட்டமைப்பை சுற்றி விவாதங்கள் நடைபெறுவதால் BGMI மீண்டும் தடை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.