நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் முதுநிலை அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் துரைராஜன் பிஎம் கிசான் திட்டத்தின் நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயமாக ஆதார் இணைப்புடன் கூடிய அஞ்சல் கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக உடனடியாக கணக்கு தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.