த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். அவர் கூறியதாவது:

“வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்களே. உண்மையான நம்பிக்கையே சமூக நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் த.வெ.க. 100 சதவீதம் உறுதியாக உள்ளது. ஒளி ஒன்று பிறக்கும்; அந்த ஒளியே நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். நம்பிக்கையுடன் காத்திருங்கள்; நல்லதே நடக்கும்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி,

“தமிழ்நாடு அமைதியான மாநிலமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது,” என்று தெரிவித்தார்.