சீமான் இயக்குநர் என்பதால், ஒரு நடிகரை விட அவர் சிறப்பாக நடிக்க முடியும் என காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கூரைக்குண்டு மற்றும் நந்தி ரெட்டிபட்டி ஊராட்சிகளில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு மக்கள் அரங்கங்களை, காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு சீமானின் வாக்குகள் தன் கண் முன்னே செல்வதை பார்த்து, சீமான் வீர வசனம் பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், சீமான் ஒரு இயக்குநர் என்பதால், நடிகரை விட அவரால் சிறப்பாக நடிக்க முடியும் என்றும் அவர் விமர்சித்தார். வரும் தேர்தலில் நடிகர், இயக்குநர் ஆகியோரை விட மக்களே வெற்றி பெறுவார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
