பிரபல நடிகையும் பயண ஆர்வலருமான ஷெனாஸ் ட்ரெசரி (Shenaz Treasury), இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குப் பயணம் செய்தபோது அங்கிருந்த ஆச்சரியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
மிசோரமில் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும், ஒரு வாகனம்கூட ஹார்ன் அடிப்பது இல்லை என்றும், சாலைகள் குப்பையே இல்லாமல் சுத்தமாக இருப்பதாகவும் அவர் வியந்து கூறியுள்ளார்.
View this post on Instagram
குறிப்பாக, அங்குள்ள சமூகம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்றும், நள்ளிரவு 12 மணிக்குக் கூட பெண்கள் தனியாகப் பயமின்றி நடக்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதாகவும், பல வீடுகளில் ஆண்கள் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்து தங்கள் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 98 சதவீத கல்வியறிவு கொண்ட இந்த மாநிலத்தில் மக்கள் மிகவும் நேர்மையாக இருப்பதாகவும், கடைக்காரர் இல்லாத கடைகள் கூட அங்கு இயங்குவதாகவும் கூறி, “இதுவும் என் இந்தியா தான்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
