மத்திய ஆயுதப்படை (CAPF) அதிகாரி ஒருவரின் இடமாற்றம் குறித்த பின்னணியில் நடந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சாதாரணமாக டீக்கடையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் பேசிக்கொண்ட உரையாடலில் இருந்து இந்த உண்மை கசிந்துள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவருக்கு ‘சல்யூட்’ அடிக்கவில்லை என்ற விவகாரம் தான் அந்த அதிகாரியின் இடமாற்றத்திற்கு காரணம் என்று வெளியில் தெரிந்தாலும், உண்மையில் உள்ளுக்குள் ஒரு பெரிய ‘கேம்’ நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு ஆலை (Plant) பொருள்களை ரகசியமாகத் திருடி விற்பனை செய்யும் சட்டவிரோத கும்பல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்தத் தொழிலில் சில அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட அந்த அதிகாரி, பதவி ஏற்றவுடன் இந்தத் திருட்டு கும்பலுக்கு செக் வைத்துள்ளார்.
இதனால் பலரின் வருமானம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், சல்யூட் விவகாரத்தைப் பெரிதாக்கி ஒரு புகாராக மாற்றி அவரை அந்த இடத்திலிருந்து காலி செய்துள்ளனர்.
நேர்மையாக இருந்தால் இடமாற்றம் கிடைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக மாறிப் பாதுகாப்புப் படையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
