உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பனிக்காலம் முடிவுக்கு வந்ததிலிருந்தே அந்த மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து 20 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துகளால் இதுவரை சுமார் 15 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ பரவும் வேகம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.