கடந்த 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை அளித்த வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவானது முதலிடத்தை பிடித்திருக்கிறது. சவுதியில் இந்தியர்கள் எண்ணிக்கையானது அதிகம். 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கியதில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் 2வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

அதாவது, 2022ல் சவுதி அரேபியாவானது இந்தியர்களுக்கு 1,78,630 வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. 2020, 2021 ஆம் வருடங்களில் முறையே 32,845 மற்றும் 44,316 ஆக இருந்த எண்ணிக்கையில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ள குவைத்,  2021ம் ஆண்டை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது.