சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ஹவுசிங் போர்டு அலுவலகத்திற்கு தனது கோப்பு (File) சம்பந்தமாக ஒருவர் நீண்ட நாட்களாக அலைந்து வந்துள்ளார். ஆனால், அங்கிருந்த அதிகாரி “ஃபைல் எங்கே இருக்கிறது என்று நினைவில்லை” எனத் தொடர்ந்து அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
In Bilaspur, Chhattisgarh, a man emptied a packet of almonds on a housing board official’s table.
MAN : "Eat some almonds, it might help you remember where you kept my missing file" 😳 pic.twitter.com/Rtre3rICxD
— News Algebra (@NewsAlgebraIND) April 18, 2026
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு பாக்கெட் பாதாம் பருப்பை வாங்கி வந்து அதிகாரியின் மேஜை மீதே கொட்டினார். “இந்தாங்க பாதாம் சாப்பிடுங்க… அப்படியாவது என்னோட ஃபைலை எங்கே வச்சீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!” என அவர் நக்கலாகக் கேட்டது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டும் இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
