இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொது மக்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக பொதுமக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிலிண்டரை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வரும் பொழுது சிலிண்டரை டெலிவரி செய்பவர்களுக்கு தனியாக பணம் கொடுக்க வேண்டிய இருப்பதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரசிதில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனவும் பொதுமக்கள் டெலிவரி ஏஜென்சிகக் கூடுதல் கட்டணம் தரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பொதுமக்கள் சிலிண்டரை புக் செய்யும் போது சிலிண்டர் உடைய விலையில் டெலிவரிக்கும் சேர்த்து பணத்தை செலுத்துகிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் ஏஜென்சிகே சென்று காஸ் சிலிண்டர் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் டெலிவரி தொகை 29.26 போக மீதமுள்ள தொகையை மட்டுமே ஏஜென்சிக்கு அனுப்பினால் போதுமானதாகும்.