வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி) தெரிவித்துள்ளது.

இருப்பினும், பேக்கேஜ் விதிகளின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று டிஜிஎஃப்டி கூறியது. இந்த வர்த்தக இணையதளங்கள் மூலம் செய்யப்படும் இறக்குமதிகள் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.