தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இந்த படம் வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்குப் பிறகு தளபதி 68 திரைப்படத்தை அட்லீ இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் ஏகே 63 திரைப்படத்தை தான் அட்லீ இயக்குவதாக புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அட்லி மற்றும் அஜித்தின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.