தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாகுபலி 2 1000 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தது. இதேபோன்று ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ள நிலையில், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஆலியா பட் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டுக் கூத்து பாடலுக்காக அண்மையில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஜப்பானில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய மொழி திரைப்படம் ஜப்பான் நாட்டில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடுவது இதுவே முதல்முறை. ஜப்பான் மொழியில் 100 நாட்களைக் கடந்து படம் ஓடிக் கொண்டிருப்பதை ஜப்பான் மொழியில் போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்காக இயக்குனர் ராஜமவுலி நன்றி தெரிவித்ததுள்ள நிலையில், படக்குழுவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்‌