பாஜக எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், கடுமையாகப் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் பாதுகாப்பு நிறைந்த விஐபி பகுதியில் இந்த விபத்து நடந்திருப்பதால், அந்த இடமே பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் சதி இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதால், அப்பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
