
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனை காட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது தேசத்தின் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கியமான தருணம். 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள். மசோதாவுக்கு வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. ஒருமித்த ஆதரவு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு இது ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.