மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு, கணவர் மறைவின் துயரத்தில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். முன்னதாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறிய விதம், வரப்போகும் தேர்தலுக்கான அரசியல் நகர்வாக இருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
