தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இது நடை பயணத்தை அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா தொடங்கி வைத்தது பாதயாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் பாதயாத்திரை தொடக்கம், மணிப்பூருக்கு சென்று ஏன் அமைதியாத்திரையை தொடங்கி வைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்