சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70 ஆனா இங்கே 20 மாதிரி நிற்கிறேன். கட்சி மற்றும் ஆட்சி என இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி. இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை எடுத்துக்காட்டாக வைத்து செயல்பட வேண்டும் எனவும் திமுக இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும் போது மிகுந்த நிம்மதி அடைகிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.