பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரின் 18-வது போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டிஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குவெட்டா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாலும், மைதானத்தில் நடந்த ஒரு மோதல் தான் இப்போது டாப் டிரெண்டிங்.
குவெட்டா அணியின் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்து வீச வந்தபோது, அவரது ‘பவுலிங் ஆக்ஷன்’ சரியாக இல்லை என்றும், அவர் பந்தை எறிகிறார் (Throw bowling) என்றும் கூறி ராவல்பிண்டிஸ் வீரர் டேரில் மிட்செல் இரண்டு முறை பேட்டிங் செய்யாமல் விலகிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த உஸ்மான் தாரிக், கையில் இருந்த பந்தை தரையில் ஓங்கி வீசி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நிலைமை மோசமானதை அடுத்து நடுவர்கள் தலையிட்டு மிட்செலுக்கு அறிவுரை கூறி விளையாட்டைத் தொடரச் செய்தனர். உஸ்மான் தாரிக் இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், மிட்செல் அவரை வெளிப்படையாக அவமானப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள், “பாகிஸ்தான் பவுலருக்கு சரியான பாடம் புகட்டிய மிட்செல்” என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
