இந்திய ரயில்களில் கூட்ட நெரிசல் என்பது புதிய விஷயம் அல்ல என்றாலும், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகள் ரயிலின் கதவு ஓரங்களிலும், நடைபாதைகளிலும், வாஷ்பேசியின் அருகிலும் அமர்ந்து பயணிக்கும் காட்சிகளை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் விழுந்து சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ரயில் பெட்டி ஒன்று பயணிகள் கூட்டத்தால் அடியெடுத்து வைக்கக்கூட இடமில்லாமல் மிக மோசமாக நிரம்பி வழிகிறது; பலர் தரையில் அமர்ந்து பயணிக்கும் அந்தச் சூழலில், கேமரா ரயிலின் கழிவறை நோக்கித் திரும்பும் போது அங்கே ஒரு பயணி மிகவும் நிதானமாக அமர்ந்திருக்கிறார். அவர் ரயிலின் வெஸ்டர்ன் டாய்லெடை தனது சொந்த சொகுசு நாற்காலியாக மாற்றி, அந்த இடத்தையே தனது பயணத்திற்கான விஐபி சீட் ஆக்கிக் கொண்டுள்ளார்.
“>
உடன் பயணித்த மற்றொரு பயணி தனது மொபைலில் எடுத்த இந்த வீடியோ, தற்பொழுது இன்ஸ்டாகிராமில் @mr_majnu_7845 என்ற கணக்கில் பகிரப்பட்டு, இணையத்தில் பரவி அண்ணனுக்கு தனி விஐபி சீட் கிடைச்சிருக்கு”, “ஸ்பெஷல் ரிசர்வேஷன் சீட்” என்றும், “கேமரா தன் மீது படும் வரை அவர் ஒரு மகாராஜாவைப் போலத்தான் அந்தப் பயணத்தை ரசித்து கொண்டிருந்தார்” என்றும் தங்களது கருத்துக்களைக் கலகலப்பாகக் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
