இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைக்காகக் குரல் கொடுப்பது என்பது ஒரு சிறந்த தேசபக்தி என்றும், அதை ஒருபோதும் குற்றம் என்று கூறிவிட முடியாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

​மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கையை “சர்வாதிகாரப் போக்கு” மற்றும் “கோழைத்தனம்” என்று சாடியுள்ள ராகுல் காந்தி, நாட்டின் நலனுக்காக எந்தவித அச்சமுமின்றி குரல் எழுப்பிய தனது தோழர்களைக் கண்டு தாம் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதையும் அவர் தனது கருத்தின் மூலம் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.