திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துவிட்டு, அதன் பிறகு “ஜாதகம் பொருந்தவில்லை” என்று கூறி திருமணத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

​ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெறுவதற்காகத் தவறான திருமண வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, பாலியல் உறவுக்குப் பின் ஜாதகத்தைக் காரணம் காட்டித் தப்பிப்பது, ‘தவறான வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் உறவு கொள்வது’ என்ற பிரிவின் கீழ் வரும் என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது. இதன் மூலம், ஜாதகம் போன்ற காரணங்களைச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு நீதிமன்றம் ஒரு பலமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.