கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என்று மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

​கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசின் இந்த உணர்வுப்பூர்வமான கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மலையாள மொழியின் அடையாளத்தோடும், மக்களின் உணர்வுகளோடும் கலந்த இந்தப் பெயர் மாற்றம், இனிவரும் காலங்களில் அனைத்து அரசு ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.