காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவளிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் பயன்படுத்தி தென் இந்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இந்திய அரசியலில் அதிகாரமற்றவர்களாக,குரலற்றவர்களாக மாற்றும் பாஜகவின் துரோகச் செயலைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மட்டும் நிறைவேற்றுங்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை ஒழித்துக்கட்டும் உங்கள் சதிச்செயலை கைவிடுங்கள்.எமது மக்களின் உழைப்பில் வரும் வரிப்பணத்தை வாங்கிக்கொண்டு ,எமது அரசியல் அதிகாரத்தைப் பறிப்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அநீதி என்று பதிவிட்டுள்ளார்.