உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் ரோராவர் பகுதியில் உள்ள ‘ஷாதாப் சிக்கன் தர்பார்’ என்ற ஹோட்டலில், ரொட்டி தயாரிக்கும் ஊழியர் ஒருவர் மாவை தேய்க்கும் போது அதன் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. சுமார் 6 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
थूक लगाकर बना रहा था रोटियां, कैमरे में कैद हो गया,अलीगढ़ का वीडियो वायरल, होटल भी बंद हो गया
पूरी खबर: https://t.co/l8KkTMJ1Fo#Aligarh pic.twitter.com/BWyCbJ9GEb
— NDTV India (@ndtvindia) February 22, 2026
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட அலிகார் போலீசார், வீடியோவில் இருந்த நபரைக் அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்தனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் சோதனை நடத்தி உணவுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன், மறு உத்தரவு வரும் வரை ஹோட்டலை மூடி சீல் வைத்தனர். பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
